கோவை: கோவை ஏப் 14 மும்பை துறைமுகத்தில் 1944-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு கப்பலில் திடீர் தீ ப்பிடித்தது. இதில் 1400டன் வெடி பொருள்கள், காட்டன் பேல் கள், தங்கம் போன்ற பொருட்கள் எரிந்து நாசமானது . இந்த ராட்சததீயை போராடி அணைக்கும் போதுதீயணைப்பு வீரர்கள் 71பேர் வீரமரணம் அடைந்தனர். இதையொட்டி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தீயணைப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த தினத்தை ஒட்டி கோவை தெற்கு தீயணைப்பு நிலைய வளாகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட நினைவு ஸ்தூபிக்கு. தீயணைப்பு துறை கோவை மேற்கு மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) சத்திய நாராயணன்,கோவை மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை, உதவி மாவட்ட அதிகாரிகள் அழகர்சாமி, முருகன், பாலகிருஷ்ணன் கோவை தெற்கு நிலைய தீயணைப்பு அதிகாரி வேலுசாமி உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.