திண்டுக்கல் : காவல்துறையில் பணியிலிருக்கும்போது உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வருடந்தோறும் அக்டோபர் 21ம் தேதி வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையில் பணியிலிருந்து வீரமரணமடையும் காவலர்களை “Indian Police in Service of the Nation” என்ற Website ஆரம்பிக்கப்பட்டு, அதில் இந்தியா முழுவதும் உயிர் தியாகம் செய்த காவலர்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.
இந்த Website தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும்¸ மாவட்ட ஆயுதப்படையிலும் காவலர்களுக்கிடையே வினாடி வினா நிகழ்ச்சியும்¸பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே கட்டுரை போட்டியும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. சக்திவேல் அவர்கள் வழங்கினார்.