கோவை : பொள்ளாச்சி அருகே நெகமம், காட்டம்பட்டியை சேர்ந்தவர் கிரி கதிர்வேல் (54), இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து இருந்தது. தனால் அதிர்ச்சி அடைந்த கிரி கதிர்வேல், உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த, துணிகள் கீழே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த நகை, பணம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் நெகமம் காவல் நிலையத்தில், புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டின் கதவை உடைக்காமல், பீரோவில் வைத்திருந்த நகை, பணம் திருட்டு போனது காவல்துறையினருக்கு, சந்தேகத்தை ஏற்படுத்தியது. காட்டம்பட்டி சாலை தோட்டம், பகுதியில் கோழிப்பண்ணையில் பணிபுரிந்த வந்த மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த ரேவதி(32), என்பவரிடம் சந்தேகத்தின் பேரில், விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். மேலும் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் கிரி கதிர்வேல், குடும்பத்துடன் வெளியே சென்றதை நோட்டமிட்டு உள்ளார். அவர் வீட்டின் முன்பு, உள்ள சலவை எந்திரத்தில் இருந்த ,சாவியை எடுத்து கதவை திறந்து, உள்ளே சென்றார். பீரோவில் இருந்த 14 பவுன் நகை, மற்றும் ரூ.4 ஆயிரத்து 500 பணம் திருடியது, தெரியவந்தது. தொடர்ந்து ரேவதியிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் , ரேவதி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.