திண்டுக்கல் : திண்டுக்கல் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை பிடிக்க திண்டுக்கல் தெற்கு காவல் உதவி ஆய்வாளர் திரு. ரவி சங்கர், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையை சேர்ந்தகாவல் துறையினர், இன்று மாலையில் நகர் பகுதியில், ரோந்து சென்றனர். அப்போது பிஸ்மி நகர் பகுதியில், உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கிவைக்க ப்பட்டிருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டில் காவல் துறையினர், அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் ஒரு அறையில் 50 மூட்டைகளில் 750 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை காவல் துறையினர், பறிமுதல் செய்தனர். பின்னர் காவல் துறையினர், நடத்திய விசாரணையில், புகையிலை பொருட்களை வீட்டின் உரிமையாளரான முகமது யூனீஸ் அங்கு பதுக்கி வைத்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் துறையினர், வலைவீசி தேடி வருகின்றனர். முன்னதாக காவல் சூப்பிரண்டு திரு. பாஸ்கரன், புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்ட வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர், தலைமறைவான வீட்டின் உரிமையாளரை விரைந்து பிடிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.