சென்னை : ஆதம்பாக்கம், சேர்ந்தவர் பாஸ்கரன், (50), இவர் கடந்த மாதம் வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, இரண்டு சவரன் தங்க நகை, ஐந்து கிலோ வெள்ளிப் பொருட்கள், இரண்டு லேப்டாப்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தன. இது குறித்த புகாரின்படி, ஆதம்பாக்கம் காவல் துறையினர், வழக்கு பதிந்து, குற்றவாளிகளை தேடினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, கே.கே.நகரை சேர்ந்த ஜோதி, (24), ராஜேஷ், (19), ஆகியோர் திருடியது தெரிந்தது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தி, 1.65 கிலோ வெள்ளி பொருட்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின், இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.