கோவை: கோவை மாவட்டம் சூலூர் பக்கம் உள்ள செஞ்சேரி புத்தூரைச் சேர்ந்தவர் வேலுசாமி ( வயது 37) இவர் உடுமலை தாலுகா தொட்டம்பட்டி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தொட்டம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட ஜல்லிபட்டியில் ஒரு தோட்டத்தை பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி சேர்ந்த ஜெயராமன் ( வயது 47) என்பவர் விலைக்கு வாங்கியுள்ளார் . இந்தஇடத்தைப் பட்டா பெயர் மாற்றுதல் செய்வது தொடர்பாக ஜெயராமன் தொட்டம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி வேலுசாமியை அணுகினார். அப்போது பட்டா மாறுதலுக்கு விஏஒவேலு சாமி ரூ 6,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்
.லஞ்சம்கொடுத்து பட்டா பெயர் மாற்றம் செய்ய ஜெயராமன் விருப்பமில்லை. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து கிராம நிர்வாக அதிகாரி வேலுசாமியிடம் கொடுக்குமாறு கூறினர். அந்த பணத்தை ஜெயராமன் வேலுசாமியிடம் கொடுத்தார் அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக வேலுசாமியை பிடித்தனர். பின்னர் அவரது வீட்டிலும் , அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.கைது செய்யப்பட்ட வி.ஏ.ஒ வை கலெக்டர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.