காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுக்கா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஓரிக்கை அப்பாவு நகரைச் சேர்ந்த சரவணன் ( 34 ) த/பெ. வெங்கடேசன் என்பவர் கொத்தனார் வேலை செய்துவருகிறார். கடந்த 05.04.22 அன்று 21.30 மணிக்கு சரவணன் மதுபானக்கடையில் மதுஅருந்தியபோது அங்குவந்த 1 ) பானு ( 40 ) த/பெ.நடராஜன், கண்ணகிபுரம், ஓரிக்கை, 2 ) குமரன் ( 40 ) தபெ.ராஜேந்திரன், கண்ணகிபுரம், ஓரிக்கை, காஞ்சிபுரம் என்பவர்களிடம் சண்டையிட்டுள்ளார். இதுகுறித்து பானு என்பவர் சரவணனின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை வெங்கடேசனிடம் மேற்படி சண்டையை பற்றி கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார் .
பின்னர் இதுசம்மந்தமாக சரவணன் குமரனின் வீட்டின் அருகே சென்று கேட்டபோது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பானு கட்டையால் சரவணனை தலையில் தாக்கியபோது மயங்கிவிட்டதாகவும், பின்பு சரவணனின் கை, கால்களை கட்டி ஓரிக்கைக்கு அடுத்துள்ள விஷ்ணுநகரில் உள்ள பட்டாசு குடோன் அருகில் உள்ள குட்டையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இன்று ( 08.04.22 ) காலை 11.00 மணியளவில் மேற்படி குட்டையில் பிரேதம் கண்டெடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுசம்மந்தமாக எதிரிகளை விரைந்து பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜீலியஸ் சீசர், அவர்களின் மேற்பார்வையில் , காஞ்சி தாலுக்கா காவல் ஆய்வாளர் திரு.இராஜகோபால் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் எதிரிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுவரப்பட்டனர். இவ்வழக்கில் ஒருமணி நேரத்திலேயே எதிரிகளை கைதுசெய்த காஞ்சி தாலுக்கா காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்