இராமநாதபுரம் : முதுகுளத்தூர் அருகே கீழக்கன்னிச்சேரியைச் சேர்ந்த மயில்வாசகன் (46), நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. மயில்வாசகன் விளங்குளத்தூர் கண்மாய் அருகே இறந்து கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. முதுகுளத்தூர்காவல் நிலையத்தில், மயில்வாசகன் மனைவி மாரியம்மாள் புகாரில் எஸ்.ஐ. திரு. செல்வம், வழக்குபதிவு செய்து இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.