விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 25; பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி இவர், நண்பர் சுரேஷ், என்பவருடன் மோட்டார் பைக்கில் சென்றபோது, ராதாபுரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த விக்ரவாண்டி காவல் ஆய்வாளர் திரு.இளஞ்செழியனை கத்தியால் குத்தினார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து, வினோத்குமாரை கைது செய்தனர். இவர், கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால், அவரது நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், வினோத்குமாரை, குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்ய கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில், விக்கிரவாண்டி காவல்துறையினர், வினோத்குமாரை கைது செய்து, ஓராண்டு கடலூர் சிறையில் அடைத்தனர்.