திருவண்ணாமலை: தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்குடனும் அவ்வாறு நடைபெறும் சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கத்திலும் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் ஒரு பகுதியாக இன்று 21.03 2022 தேதி திருவண்ணாமலை ராதா சந்திப்பு பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அ . பவன்குமார் அவர்களின் தலைமையில் திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V. ஸ்ருதி அவர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் தியாகி அண்ணாமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் முகம் பார்க்கும் கண்ணாடியை காட்டியும் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறியும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்களை ஏந்திய படியும் முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கில் நடப்பாண்டில் மட்டும் இதுவரை தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கியவர்கள் மீது வழக்குகளும் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குதல், செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்குதல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், அதிக பாரம் ஏற்றுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுதல், சிக்னலை மீறி போன்ற ஓட்டுநர் உரிமத்தை தற்காலிக ரத்து செய்யும் விதி மீறல்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது . மேலும் கடந்த ஆண்டு 20.03.2020 தேதி வரை தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கி அவர்கள் மீது வழக்குகளும் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குதல் ,செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்குதல், அதிக வேகமாக வாகனத்தை இயக்குதல், ஓட்டுனர் உரிமத்தை தற்காலிக ரத்து செய்யும் விதி மீறல்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகமாக செய்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்வது அதிகப்படுத்தியது கடந்த ஆண்டு20.03.2022 ஆம் தேதி வரை 125 விபத்து மரணம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 133 நபர்கள் மரணமடைந்து. இருந்த நிலையில் நடப்பாண்டில் 27.2 சதவீதம் குறைந்து இதுவரை 91 விபத்து மரணம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொண்ணூற்று ஐந்து நபர்கள் மரணமடைந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டில் 20.03.2021 ஆம் தேதி வரை 263 விபத்து காயம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 370 நபர்கள் காயமடைந்திருந்த நடப்பாண்டில் 6% குறைந்து 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 311 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்