ஈரோடு: இன்று 11.04. 22ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் சென்னிமலை காவல் நிலைய சரகம் குமரன் சதுக்கம் பகுதியில் சாலை விதிகளை கடைப்பிடித்தல் மற்றும் ஆம்புலன்ஸ் முதல் உதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாலை விதிகள் குறித்த விளம்பரப் பலகை வைத்து அதில் உள்ள குறியீடுகளை மாணவ மாணவிகளுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பொதுமக்களுக்கும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் சென்னிமலை BOSS ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதிலுள்ள உபகரணங்கள் குறித்தும் விபத்துக்குள்ளான அவர்களுக்கு முதலுதவி செய்வது பற்றியும் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதில் சென்னிமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் சென்னிமலை குமரப்பா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி வாசுகி மற்றும் ஆசிரியர்கள் முருகன் ஜெயலட்சுமி ஆகியோரும் மாணவர்களும் பொதுமக்களும் ஆட்டோ ஓட்டுனர்களும் கலந்து கொண்டார்கள்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :