மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி பெருந்திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தமிழகத்தில், 17நாட்கள் திருவிழா நடைபெறும் ஒரே வரலாற்று சிறப்புமிக்க மாரியம்மன் கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவையொட்டி கோவிலின் முன்பாக யாகத்துடன் நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து அர்ச்சகர் சண்முகவேல், வைகை ஆற்றுக்கு சென்று பூஜைகள் செய்து நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. அப்போது திரளான பெண்கள் குலவையிட்டு சாமி ஆடினர். தொடர்ந்து காப்பு கட்டுதல் துவங்கினர்.
நேற்றைய முதல் நாள் மண்டகப்படி தாரர் மந்தையன் சேர்வை குமாரர்கள் செய்திருந்தனர். கோவில் நிர்வாக அதிகாரி இளமதி மற்றும் பணியாளர்கள் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உட்பட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் அக்னிச்சட்டி வரும் 14-ஆம் தேதியும் பூக்குழி திருவிழா வரும் 15ஆம் தேதியும் தேரோட்டம் 21ம் தேதியும், அதைத்தொடர்ந்து 22 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறும் இரண்டாம் நாள் மண்டகப்படியான இன்று சோழவந்தான் தொழிலதிபர் மணி, என்ற முத்தையா வள்ளிமயில் மற்றும் லயன்ஸ் தலைவர் மருத்துவர் மருதுபாண்டியன் குடும்பத்தினரின் மண்டகப்படி நடைபெற உள்ளது சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சுகாதார பணிகளையும் சோழவந்தான் காவல் துறை சார்பில், பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி