மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 14ஆம் தேதி பால்குடம் அக்னிச்சட்டி நிகழ்ச்சிகள் 15ஆம் தேதி பூக்குழி நிகழ்ச்சியும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான , தேரோட்டம் காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை மாவட்ட எஸ்.பி. திரு. சிவ பிரசாத், சமயநல்லூர் டி.எஸ்.பி திரு. பாலசுந்தரம் , சோழவந்தான் ஆய்வாளர் திரு. சிவபாலன், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் திரு. ஜெயராமன் ,பேரூராட்சி செயல் அலுவலர் திரு. சுதர்சன், துணைத்தலைவர்லதா திரு. கண்ணன் பணி நியமன குழு திருமதி. ஈஸ்வரி ஸ்டாலின், தொழிலதிபர் திரு. அரிமா சங்கத் தலைவர் டாக்டர் திரு. மருதுபாண்டியன், திரு. மணி முத்தையா, பொதுக்குழு உறுப்பினர் திரு. ஸ்ரீதர், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் திரு. அண்ணாதுரை, பேரூர் செயலாளர் திரு. முனியாண்டி, நிர்வாகிகள் வழக்கறிஞர் திரு. சத்யபிரகாஷ், சோழவந்தான் ஆர் .திரு. ஸ்டாலின், சிபிஆர் திரு. சரவணன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் திரு. கேபிள் ராஜா, வழக்கறிஞர் திரு. முருகன், முன்னாள் பேரூராட்சி சேர்மன்திரு. ஐயப்பன், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் திரு. பாலு, மாணவரணி எஸ். ஆர் திரு. சரவணன், திரு. முத்துக்குமரன், திரு. ராஜா என்ற இருளப்பன், வர்த்தக சங்கம்ஜவஹர், பிடிஆர் பாண்டியன், ஜவுளி நிறுவனர் திரு. பி. எஸ். மணி, கவுன்சிலர் திரு. சிவா, சங்கங்கோட்டை சந்திரன் மற்றும் சரவணன் நகர இளைஞரணி முட்டை கடை காளி மாவட்ட பிரதிநிதி திரு. சுரேஷ் தகவல் தொழில் நுட்ப திரு, அணி பார்த்திபன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேர் ,பெரிய கடை வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, உள்ளிட்டநான்கு ரத வீதிகளில், வலம் வந்து தேர் நிலை கொண்டது. இதில், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். மேலும், பக்தர்கள் சேத்தாளி வேஷம் பூண்டும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் தேருக்கு முன்பாக வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று தேரோட்டம் நடந்தது. பொதுமக்கள் மத்தியில், மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியது. தொடர்ந்து, திருவிழாவின் கடைசி திருவிழாவான அம்மன் ஊஞ்சல் ஆடும் தீர்த்தவாரி உற்சவம் நாளை நடைபெற உள்ளது . பாதுகாப்பு ஏற்பாடுகளை ,மதுரை மாவட்ட எஸ். பி உத்தரவின் பேரில், சமயநல்லூர் டி.எஸ். பி ஏற்பாட்டில் சோழவந்தான் காவல் துறையினர் , தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர்,ஈடுபட்டிருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி