தென்காசி: விற்பனைக்காக புகையிலை மற்றும் மது பாட்டில்களை வைத்திருந்த நபர் கைது செய்து சிறையில் அடைப்பு தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்கலங்கல் பேருந்து நிலையம் அருகே சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. துரைராஜ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது அந்த நபர் காவல்துறையினரை அசிங்கமாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்துள்ளார்.
மேற்படி நபரின் பையை சோதனை செய்து பார்த்ததில் அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. துரைராஜ் கொடுத்த தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு. நிஷாந்த் அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி கீழக்கலங்கல் பேட்டை தெருவைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் மாரிமுத்து(32) மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 21 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் 13 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.