அரியலூர் : அரியலூர் மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் துணை காவல் சூப்பிரண்டு திரு.கலைகதிரவன், உத்தரவின்பேரில் மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் திரு .கோபி, தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் திரு .ராஜதுரை மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மீன்சுருட்டி அருகே ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் உள்ள புதிய மேம்பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கொல்லாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த செல்வம் (45), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பல்வாய்கண்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் ஜானகிராமன்(23), சப்பானி குட்டை பத்தர் தெருவை சேர்ந்த ஆரோக்கியதாசின் மகன் மணிகண்டன்(21), மற்றும் சுண்டிபள்ளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த உதயகுமாரின் மகன் வினோத்குமார்(22), என்பது தெரியவந்தது. இதையடுத்து ஜானகிராமன் கையில் வைத்திருந்த பையை வாங்கி பார்த்தபோது, அதில் கஞ்சா இருந்ததை கண்ட காவல்துறையினர், இது பற்றி விசாரித்தபோது 4 பேரும் சேர்ந்து விற்பனைக்காக பிரித்துக்கொள்ள கஞ்சா வைத்திருந்ததாக தெரியவந்தது. இது குறித்து மீன்சுருட்டி ராஜதுரை வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்த 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.