காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், சுங்குவார்சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிறுமாங்காடு கிராமம், மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஜெயராமன் ( 38 ) த/பெ.குணசேகரன் என்பவர் நேற்று ( 16.04.2022 ) இரவு சுமார் 22.00 மணியளவில் தனது வீட்டின் பின்புறம் கட்டிவைத்திருந்த பசுவினை காணவில்லை என்று அளித்த புகாரின் பேரில் சுங்குவாசத்திரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இது சம்மந்தமாக எதிரிகளை விரைந்து பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் உத்தரவின்பேரில் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுனில் அவர்களின் மேற்பார்வையில் திரு.பரந்தாமன், ஆய்வாளர் சுங்குவார்சத்திரம் காவல்நிலையம் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு.
தீவிர விசாரணை மேற்கொண்டதில் சந்தேகத்திற்கிடமாக TATA Ace வாகனத்தில் மாட்டினை ஏற்றிவந்த
1 ) சஞ்சய் ( 25 ) த/பெ.உதயகுமார், மாரியம்மன் கோயில் தெரு, கட்டவாக்கம், 2 ) தீபக் ( 25 ) கட்டவாக்கம்,
3 ) ராம்கி ( 34 ) த/பெ.ராஜாராம், மெயின்ரோடு, த/பெ.ஜெகன்நாதன், மாரியம்மன் கோயில் தெரு, 4 ) ராஜசேகர் ( 26 ) த/பெ.ரமேஷ், கட்டவாக்கம் மேட்டுக்காலனி, தென்னேரி, 5 ) விக்னேஷ் ( 27 ) த)பெ.மூர்த்தி, மெயின்ரோடு, கட்டவாக்கம் ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதை
ஒப்புக்கொண்டனர். பின்னர் எதிரிகள் ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய TATA Ace பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வரப்பட்டது . பின்னர் எதிரிகள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வழக்கில் புகார் பெறப்பட்ட சிலமணி நேரத்திலேயே எதிரிகளை கைதுசெய்த காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்