கடலூர்: விருத்தாசலத்தை அடுத்த டி.வி புத்தூரை சேர்ந்த குணசேகரன் மற்றும் இவரது உறவினர்கள் ராஜா, மருதமுத்து, மல்லிகா, தமிழ்ச்செல்வன், தனலட்சுமி ஆகியோர் இதே பகுதியிலுள்ள படைவெட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பொங்கலிட்டனர். அப்போது இதே பகுதியை சேர்ந்த உதயகுமார் அவரது தந்தை பழமலை, உதயகுமாரின் மனைவி தீபா, மற்றும் உறவினர்கள் மணிமாறன், பாபு ஆகியோரும் கோயிலில் பொங்கலிட்டனர். இரு தரப்பினரிடையே ஏற்கனவே மனைத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கோவில் விழாவில் இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கட்டையாலும் கழியாலும் தாக்கி கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த குணசேகரன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இதுகுறித்து குணசேகரன் கொடுத்த புகாரின்பேரிலும், மற்றொரு தரப்பில் உதயகுமாரின் மனைவி தீபா, தான் அணிந்திருந்த 1 பவுன் தாலிசங்கிலியை பறித்துக்கொண்டு தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் இருதரப்பை சேர்ந்த ராஜா, மருதமுத்து, உதயகுமார், பழம ஆகிய 4 பேரையும் கருவேப்பிலங்குறிச்சி காவல் உதவி- ஆய்வாளர் திரு.அன்பழகன் கைது செய்தார்..