விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே பள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீஅய்யனார், ஸ்ரீ அரிய சுவாமி கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, 2 ஆண்டுகளுக்கு பின்பு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக, நடைபெற்றது. போட்டியை, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாண் குமார் தொடங்கி வைத்தார்.
மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 400 காளைகள் முன்பதிவு செய்திருந்த நிலையில், 353 காளைகள் பங்கேற்றன.
மேலும், 150 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட நிலையில், ஒரு மணி நேரத்திற்கு 25 வீரர்கள், என 6 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. திருச்சுழி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. மதியழகன், தலைமையில், சுமார் 400-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி