விருதுநகர்: மாவட்டம் 23.08.2019 ஆவியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வினோபாநகர் பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. தமிழழகன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ஆவியூர் வினோபா நகரில் உள்ள ஊர்காவலன் கோயில் அருகில் இரண்டு லாரிகளில் மணல் கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டம் பழனியப்பபுரத்தை சேர்ந்த ஜெயராஜ்(40) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் பூசனூரைச் சேர்ந்த கன்னிசாமி(35) ஆகிய இருவரையும் u/s. 21(5) Mines and Minerals Act கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ததுடன், மணல் 12 டன் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.