விருதுநகர்: 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. A. சிவஞானம் அவர்கள், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. M.ராஜராஜன் அவர்கள் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்ததோடு, காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.மேலும் காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் காவல் சார்பு ஆய்வாளர் திரு.அசோக் குமார் அவர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவரை பெருமைப்படுத்தும் விதமாக இவருக்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. M.ராஜராஜன் பரிந்துரையின்படி, காவல் சார்பு ஆய்வாளர் திரு.அசோக் குமார் அவர்களுக்கு சுதந்திர தினத்தில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நற்சான்றிதழ் பெற்ற காவல் சார்பு ஆய்வாளர் திரு.அசோக் குமார் அவர்களை போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.