சென்னை : சென்னை மாநகர காவல் ஆணையர் , கட்டுப்பாட்டு அறைக்கு மா்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னை விமான நிலையத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் வெடிக்கும் என்றும், உங்களால் முடிந்தால் விமான நிலையத்தை காப்பாற்றிக்கொள்ளுங்கள், என்றும் கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இது குறித்து சென்னை விமான நிலைய, காவல் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு, தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து உஷாரான மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் மோப்ப நாய்கள், மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னை விமான, நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும், தீவிரமாக சோதனை செய்தனர்.