கரூர் : குளித்தலை அடுத்த, பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்., சேர்ந்தவர் மலையாளன், (46), கூலி தொழிலாளி. இவர், நேற்று, யமகா இருசக்கர வாகனத்தில், கிருஷ்ணராயபுரம் சென்று விட்டு, கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பொய்கை புத்துார் தனியார், பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பள்ளப்பட்டியை சேர்ந்த ஷேக்|பரீத், (38), என்பவர், ராயல் என்பீல்ட் புல்லட்டில் அதிவேகமாக வந்து, மலையாளன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு, கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து, புகார்படி லாலாபேட்டை காவல் துறையினர், வழக்குப்பதிந்து தீவிரமாக, விசாரிக்கின்றனர்.