திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் திரு ராமச்சந்திரன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீரங்கம் சரகத்திக்கு உட்பட்ட திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர், உறையூர் காவல் நிலைய ஆய்வாளர், திருச்சி தில்லைநகர் ஆய்வாளர், ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில், விநாயகர் சதுர்த்தி விழாவையும் ஊர்வலத்தையும், பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி நடத்தும் பொறுப்பாளர்கள் ஒருமனதாக உறுதிமொழி அளித்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி