செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில், பாலூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், லாரியிலிருந்து எழுப்பும் ஏர் ஹான் சத்தத்தால், இரவு நிம்மதியாக தூங்க முடியவில்லை, லாரிகள் வேகமாக செல்வதால், விபத்துகளும் ஏற்படுகின்றன, என்று கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து, அதிகாரிகளுக்கு மாவட்டஆட்சியர் திரு. ராகுல்நாத், உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் திருமதி. ஹமிதா பானு, பாலூர் பகுதியில் வாகன தணிக்கை செய்து போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 15 லாரிகள் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் 3 லாரிகளை பறிமுதல் செய்து பாலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.