கரூர் : கரூர் மாவட்டம், தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (34), வேடச்சந்துார் அருகே விருதலைப்பட்டியில், வசித்து வந்தார். இவர் கரூர் மாவட்ட எல்லையான கணவாய் பகுதியில், கஞ்சா விற்பனையில், ஈடுபட்டு ள்ளார். காவல் துறையினர் , பலமுறை எச்சரித்தும் கஞ்சா விற்பனையை நிறுத்தவில்லை. நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு கூம்பூர் காவல் துறையினரால், பொன்னுசாமி பிடிக்கப்பட்டு விசாரணைக்காக காவல் துறையினரின் ‘டூ வீலரில்’ அமர வைத்து அழைத்துச்செல்லப்பட்டார். அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம், இவர்கள் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில், பொன்னுச்சாமி, மற்றும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில், அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் பொன்னுசாமி, இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் துறையினர் , விசாரிக்கின்றனர்.
















