கரூர் : கரூர் மாவட்டம், கண்ணமுத்தாம் பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (29), இவர் சணப்பிரட்டியில், உள்ள தனது சகோதரி சகுந்தலா வீட்டில், தங்கியிருந்து கரூரில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற பிரபாகரன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர் கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில், தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சகுந்தலா கொடுத்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை, நடத்தி வருகின்றனர்.
















