சேலம் : சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் உள்ள அரசமரத்துகரட்டூரை சேர்ந்தவர் அர்ஜுனன். இவருடைய மகன் சந்தோஷ் சரக்கு வாகன டிரைவர் பணி புரிந்து வருகிறார் . இந்த நிலையில்கொண்டலாம்பட்டி ரவுண்டானாவுக்கு சந்தோஷ் நேற்றுஇரவு 9.30 மணிக்கு தனது சரக்கு வாகனத்தில் வந்துள்ளார்.அங்கு காவல்துறையினர் சந்தோஷ் வந்தவாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது சந்தோஷ் குடிபோதையில் இருந்ததாகவும், அதனால் அவர் மீது காவல்துறையினர் குடிபோதையில்வாகனம் ஓட்டியதற்காக வழக்குப்பதிவு செய்து வாகனத்தைபறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் தொகை கட்ட வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் வாலிபர் சந்தோஷ் பறிமுதல் செய்த வாகனத்தை விட்டு செல்ல மனமில்லாததால் பெட்ரோல் வாங்கி வந்து, காவல்துறையினரை கண்டித்து கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் நடுரோட்டிலேயே தன் மீதுஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் உடலில் தீப்பிடித்து எரிந்ததால் அலறித்துடித்தார். தீயில் கருகி காயம் அடைந்த அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்த மனவேதனையில் வாலிபர் நேற்று தீக்குளித்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது