மதுரை: காதலுக்கு பெற்றோர் மறுத்ததால் மனம் உடைந்து வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை. மதுரை மார்ச் 11 காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .டி.ஆர்.ஓ.காலனி பெரியார் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் நாகராஜ்23. இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த நாகராஜ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தாய் எழிலரசி கே புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி















