கோவை : திருப்பூர் கருவம்பாளையம், ஆலாங்காட்டை சேர்ந்தவர் ரகுபதி, (21), பனியன் தொழிலாளி. இவரது உறவினர்கள் கே.வி.ஆர்., நகரில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகின்றனர். அவ்வப்போது கடைக்கு சென்று ரகுபதி உதவி செய்வார்.கடந்த, 20ம் தேதி கடையில், இருந்த ரகுபதியிடம், கடைக்கு சாப்பிட வந்த சிலர் தகராறு செய்தனர். தொடர்ந்து, ரகுபதியை பிடித்து இரும்பு கம்பி, மரக்கட்டையால் தாக்கினர். காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, கோவையில் மேல் சிகிச்சை பெற்று வந்தார்.
தாக்குதலில், ஈடுபட்ட, தேவேந்திரன், (50), சரவணன், (40), முத்து, (50), ஆகியோர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் சென்ட்ரல்காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவமனையில், சிகிச்சையில் இருந்தரகுபதி இறந்தார். இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்து, தேவேந்திரன், சரவணன், முத்து ஆகியோரை சென்ட்ரல் காவல் துறையினர், கைது செய்து சிறையில், அடைத்தனர்.