கோவை : கோவை சிறுமியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்த வழக்கில், வாலிபருக்கு, 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், பெ.நா.பாளையம் அருகே செல்வபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கணேசன், (27), கடந்த, 2017ம் ஆண்டு ஜூன், 5ல், 16 வயதுடைய சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பெ.நா.பாளையம் காவல் துறையில், புகார் அளித்ததை தொடர்ந்து, கணேசனை கைது செய்து, கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட கணேசனுக்கு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு, 10 ஆண்டு சிறை, கடத்தி சென்ற குற்றத்திற்கு ஐந்தாண்டு சிறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில், அனுபவிக்க உத்தரவிட்டார்.