தென்காசி : ஆலங்குளம் அருகே, சிவலார்குளம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த, மதன்குமார்(26), இவர் தெற்குப்பட்டி கிராமத்தில், செங்கல் சூளை நடத்தி வருகிறார். மதன்குமார் அவரது உறவினரான, சடையாண்டி என்ற சண்முகசுந்தரம்(67), என்பவருக்கும் நிலத்தகராறு, இருந்தது தெரியவந்தது. இதனால் இருவர் குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு காமாட்சி, அம்மன் கோவில் தெரு அருகில் மதன்குமார், நின்று கொண்டிருந்தபோது சண்முக சுந்தரத்தின் மகன் சரவணகுமார்(37), என்பவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதால், சரவணகுமார், அவரது உறவினர் கொக்கி குமார்(27), மற்றும் அவரது தந்தை சடையாண்டி என் இன்று சண்முகசுந்தரம், ஆகியோர் சேர்ந்து மதன்குமாரை, அறிவாளி வைத்து வெட்டியுள்ளனர். இதில் கழுத்தில் வெட்டு பட்ட, சரவணகுமார் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த ஆலங்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சரவணகுமாரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சரவணகுமார், கொக்கி குமார், சடையாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்து, சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.