கரூர்: பெருந்துறையை அடுத்த துடுப்பதி, சின்னமல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி மனைவி பழனியம்மாள் (80). இவர் சம்பவத்தன்று நேற்று காலை துடுப்பதி, பாலக்கரை கீழ்பவானி வாய்க்காலில் துணி துவைத்துக் கொண்டு இருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக கால்வழுக்கி வாய்க்காலில் விழுந்து தண்ணீரில் மூழ்கிஉயிரிழந்தார் . இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.