கரூர் : கரூர் மாவட்டத்தில், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு, ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், 1,200க்கும் மேற்பட்டவை, இயங்கி வருகின்றன. இங்கு, போர்வை, ஜன்னல் திரை, தலையணை உரை, மேஜை விரிப்பு உற்பத்தி மூலம் ஆண்டுக்கு, 8,000 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கிறது. இந்நிலையில், சரக்கு வாகனங்களில் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுவதாக, புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, வட்டார போக்குவரத்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது, கரூர் நகர பகுதியை தவிர, மணல்மேடு ஜவுளி பூங்கா, சேலம் தேசிய நெடுஞ்சாலை, ஈரோடு உட்பட பல்வேறு இடங்களில், 200க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி, நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு, இடைத்தரர்கள் மூலம், ஒப்பந்த தொழிலாளர்கள், பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
இவர்கள், லாலாப்பேட்டை, அரவக்குறிச்சி, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம் உட்பட பல்வேறு, பகுதிகளிலிருந்து, கரூருக்கு வருகின்றனர். இங்கிருந்து, தேவைப்படும் தொழிற்சாலைகளுக்கு, அனுப்பி வைக்கப்படுகின்றனர். அப்போது, சரக்கு வேன்களில் கும்பல், கும்பலாக ஆடு, மாடுகளை ஏற்றி செல்வது, போல் கூலி தொழிலாளர்களை ஏற்றிச்செல்கின்றனர். இதில், பெண் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். சரக்கு வாகனங்களில், பயணிகளை அழைத்து செல்லக்கூடாது. என, சட்ட விதிகள் உள்ளன. ஜவுளி சங்கங்களில் முக்கிய பொறுப்பில், உள்ளவர்களின் நிறுவனத்திற்கு, இவ்வாறு தொழிலாளர்கள் அழைத்துச் செல்கின்றனர். அரசியல் செல்வாக்கு இருப்பதால், அவர்கள் மீது காவல் துறையினரின், நடவடிக்கை.