தென்காசி: தென்காசி மாவட்டம், மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (03.03.2022) உதவி காவல் கண்காணிப்பாளர்(பயிற்சி) திரு.கிரிஷ் யாதவ் IPS அவர்கள் தலைமையில் தனிப் பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் குற்றம் நடக்காமல் முன்கூட்டியே தடுப்பது குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
பின்பு காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வழங்கப்பட்ட அரசு இரு சக்கர வாகனங்களை தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ஸ்ரீ தாமரை விஷ்ணு அவர்கள் அனைத்து வாகனங்களும் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு முறையாக வைக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்து, வாகனத்தில் முதலுதவிக்கு தேவையான பொருள்கள்கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், கட்டாயம் தலைக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
















