கோவை : தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்களை, கேரளாவில் இருந்து கடத்தி வந்து பொள்ளாச்சியில், விற்பனை செய்வதாக பொள்ளாச்சி நகர மேற்கு காவல் துறையினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி. அனந்தநாயகி, தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் திரு. இளவேந்தன், மற்றும் காவல் துறையினர், பொள்ளாச்சி- பாலக்காடு ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள திருமண மண்டபம் அருகே வந்த 2 கார்களை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர், நிறுத்தி அதற்குள் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். 6 பேர் கைது உடனே காவல் துறையினர், காரை சோதனை செய்த போது, தடை செய் யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர், விசாரணை நடத்தினார்கள்.