திருச்சி : சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த (17.05.2022), தேதி கொசமட்டம் வங்கியில் பணிபுரியும் கோபிராஜ், என்பவர் சுரண்டையில் உள்ள வங்கியிலிருந்து சங்கரன்கோவிலில் உள்ள வங்கிக்கு ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எடுத்து கொண்டு சென்றபோது KV ஆலங்குளம் காட்டுப் பகுதியில் வைத்து 4 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து கோபிராஜை பைக்கிலிருந்து, பள்ளத்தில் தள்ளி, அவரை தாக்கி அவரிடமிருந்து பணத்தை வழிப்பறி செய்து சென்று விட்டதாக சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. கிருஷ்ணராஜ் IPS, அவர்களின் உத்தரவின் பேரில் புளியங்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர். திரு.கணேஷ், அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் சேர்ந்தமரம காவல் நிலைய பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கிரிஷ் யாதவ், IPS அவர்கள் தலைமையில் கடையநல்லூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி,சார்பு ஆய்வாளர்.திரு வேல்பாண்டி, குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் திரு. குட்டி ராஜா,குற்றப்பிரிவு முதல் நிலை காவலர்கள் திரு விஜய பாண்டியன், திரு. சிவராமகிருஷ்ணன், திரு மதியழகன்,திரு. மாரிமுத்து, சேர்ந்தமரம் தலைமை காவலர் திரு. குருநாத குரு, மற்றும் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவலர்கள் திரு. மனோஜ்,திரு.ஜேசு மரிய அந்தோணி, ஆகியோர் கொண்ட தனிப்படையினர், குற்றவாளிகளை தீவிரமாக,தேடி வந்தனர்
இரகசிய தகவலின் பேரில் மாரியப்பன்(29), முருகன் செக்கடி வடக்குத்தெரு குருவிகுளம்,முத்துக்குமார் (எ) செயின் குமார்(32), வேலுச்சாமி வடக்குத்தெரு செந்தட்டி,திருமலைக்குமார்.(எ) மின்னல் குமார்(27) S/O திருமலைசாமி பால்பண்ணை தெரு தளவாய்புரம். அய்யனார்(26) கோபால் தெற்குதெரு ஆட்கொண்டார் குளம் ஆகியோர்களை, பிடித்து விசாரணை செய்ததில் கோபிராஜ் என்பவரிடமிருந்து அடித்து பணத்தை வழிப்பறி செய்ததை ஒப்புக் கொண்டனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்டு மறைத்து வைத்திருந்த, பணத்தை பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கிரிஷ் யாதவ் அவர்கள் தலைமையில், கைப்பற்றி குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த குற்றவாளிகள் மீது சேர்ந்தமரம் சங்கரன்கோவில். காவல் நிலையங்களில் ஆள்கடத்தல், வழிப்பறி, கொலை முயற்சி போன்ற வழக்குகள் நிலுவையில், உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் குற்றவாளிகளை சிறப்பாக கண்டுபிடித்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புளியங்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் , ஆகியோர் தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்..