காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தவேலூர், தர்காமேட்டையை சேர்ந்த பிரகாஷ் (31), என்பவர் தனது காரில் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜகுளம் அருகே அவரது காரை, மோட்டார் சைக்கிளில், வந்த 3 பேர் வழிமறித்து கற்களால் கார் கண்ணாடியை உடைத்து, காரில் இருந்த பிரகாஷை கீழே இறக்கி அடித்து அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.1,200-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து உடனடியாக பிரகாஷ் காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையில் , புகார் அளித்தார்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் சூப்பிரண்டு டாக்டர் திரு. சுதாகர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் மற்றும் ரோந்து காவல் துறையினருக்கும், அறிவுறுத்தினார். இது சம்பந்தமாக தாலுகா காவல் துறையினர், அடங்கிய குழுவினர் விரைந்து செயல்பட்டு காஞ்சிபுரம், பெரிய காரையை சேர்ந்த ரவிச்சந்திரன் (21), ருத்திரமூர்த்தி (21), ராஜி (21), ஆகியோரை கைது செய்தனர். குற்றம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த குழுவினரை காஞ்சிபுரம், சரக காவல்துறை துணைத்தலைவர் சத்யபிரியா, மற்றும் மாவட்ட காவல் சூப்பிரண்டு டாக்டர் திரு. சுதாகர், ஆகியோர் வெகுமதி அளித்து பாராட்டினார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்