சென்னை : சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive Against Drugs) மூலம் கஞ்சா, போதை பொருட்கள், சட்டவிரோதமாக போதைக்கு பயன்படுத்தும், உடல்வலி நிவாரண மாத்திரைகள் கடத்தி வருப வர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு, கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (29.04.2022), ஆர்.கே.நகர், சுணணாம்பு கால்வாய் பேருந்து நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியே சந்தேகப்படுமபடி ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில், வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்து, சந்தேகத்தின்பேரில், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு உடல்வலி நிவாரண மாத்திரைகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன் பேரில் சட்டவிரோதமாக ,உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த வடிவுநாதன் (வ/37) , திருநின்றவூர் என்பவரை கைது செய்தனர் . அவரிடமிருந்து Tapentadol, Nitrazepam, Clonazepam, Alprazolan, Alprazolam ஆகிய உடல்வலி நிவாரண மாத்திரைகள் -12,000 Nos., 10 மி.லி. அளவு கொண்ட Ketamine ஊசி மருந்து குப்பிகள் – 100 மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய, 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரிமீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.