திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த பிரளயம்பாக்கம், பரிக்கபட்டு பண்டிகாவானூர் கிராமத்தில்ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர், பச்சை பயிறு விவசாயம் செய்யப்பட்டு இருந்ததது மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. சுமார் 6 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களில் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் அதனை அகற்றும் பணியை வருவாய் துறை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது பொன்னேரி பொறுப்பு கோட்டாட்சியர் பரமேஸ்வரி ,வட்டாட்சியர் ரஜினிகாந்த், கவுன்சிலர் ஜமுனாரஜினி ஊராட்சி மன்ற தலைவர்கள் சதீஸ்குமார், ப்ரியாராஜேஷ்கண்ணா, வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா கிராம நிர்வாக அலுவலர் ஜானகிராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்