கரூர் : கரூர் தென்னிலை அருகே உள்ள காட்டு பாளையத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (30), இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில், ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (25), இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் தான் ஆகிறது. இந்நிலையில் திருநாவுக்கரசு மற்றும் அவரது தாயார் மணிமேகலை, உறவினர் ராஜேந்திரன், ஆகியோர் தன்னிடம் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக மகாலட்சுமி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் திருமதி. ரூபி, வழக்குப்பதிந்து, திருநாவுக்கரசுவை, கைது செய்து விசாரணை, நடத்தி வருகிறார்.