மதுரை : மதுரை,சில மாதங்களுக்கு முன் கேரளாவில், இருந்து மதுரைக்கு வனவிலங்குகளை கடத்தி வந்த வழக்கில்தலைமறைவாக இருந்த சென்னை சுரேஷ் பாலாஜியை மதுரை வனத்துறையினர் கைது செய்தனர். வனஅலுவலர் குருசாமி தபாலா கூறியதாவது, கேரளாவில் இருந்து அரிய வகை காட்டுப்பூனை, கழுகு, ஆந்தையை பேருந்து, மூலம் கடத்தி, மதுரை தபால் தந்தி நகர் ரோட்டில் காரில் கொண்டு சென்றனர். காரை சோதனை செய்தபோது வனவிலங்கு கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது. இவ்வழக்கில் நான்கு பேரை, கைது செய்து விலங்குகளை மீட்டோம்.
இந்நிலையில் சென்னை வனவிலங்கு ‘சப்ளையர்’ சுரேஷ் பாலாஜி, தலைமறைவாக இருந்து வந்தார். உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றார். மாநகராட்சி துாய்மை பணியாளர், அரசு பேருந்து கண்டக்டரிடம் ஜாமினுக்காக சாட்சி கையெழுத்து வாங்கி, வாடிப்பட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஜாமின்தாரர்கள் அரசு அலுவலர்கள், கவுன்சிலர்கள் என உயர் பொறுப்பில் இல்லை, எனக்கூறி நீதிமன்றம் நிராகரித்து, உடனே கைது செய்ய கூறியதால் அவரை கைது செய்துள்ளோம் என்றார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி