சென்னை : சென்னை, முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகர், ஏவான் தெருவைச் சேர்ந்தவர் ஜோதி, (45), இவர், கடந்த 10ம் தேதியன்று, காமராஜர் தெரு வழியாக, நடந்து சென்றார். அங்கு இரு சக்கர வாகனத்தில், வந்த மர்ம நபர்கள் இருவர், ஜோதியின் தங்க தாலியை பறித்தனர். அவர்களுடன் போராடியதில், தாலி கயிறு அறுந்து, 2 சவரனுடன் மர்ம நபர்கள் பறித்து தப்பினர். புகாரின்படி, ஜெ.ஜெ., நகர் காவல் துறையினர், ‘சிசிடிவி’ கேமரா வாயிலாக, துப்பு துலக்கி, வழிப்பறியில் ஈடுபட்ட, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தில்ஷாத், (34), முகமது தனிஷ், (28), ஆகியோரை கைது செய்து, 2 சவரன் நகையை, பறிமுதல் செய்தனர்.