கடந்த சில நாட்களாக தமிழகம் எங்கும் சந்தேகத்தின் பேரில் வடநாட்டிரை தாக்கும் சம்பவங்களும், சில இடங்களில் உயிர் பலிகளும் நிகழ்கின்றன.
நேற்று திருவண்ணாமலை கோயிலுக்கு சென்ற குடுத்தினரை சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு கிராமமே ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தி ஒரு முதாட்டி இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
அதன் முதற்கட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிநகர காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் யாரையும் பிடித்து தாக்க கூடாது. உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படையுங்கள் என காவல்துறையினர் விழிப்புணர்வு தூண்டு பிரசுரம் வழங்கினர்.
இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பகலவன் வெளியிட்ட அறிக்கையில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.