சென்னை : சென்னை, வேளச்சேரி, தண்டீஸ்வரம் நகரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் மூர்த்தி, (60), சில வாரங்களுக்கு முன் இவரது, ‘வாட்ஸ்- ஆப்’ எண்ணிற்கு தகவல் வந்தது. அதில், அவரின் நண்பரின், மருத்துவ செலவிற்காக பணத் தேவை இருப்பதாகவும், அதற்காக அனுப்பி உள்ள வங்கி கணக்கில், 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டிருந்தது. இதை அடுத்து ஸ்ரீகாந்த்தும் பணத்தை, வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். சில தினங்கள் கழித்து அவரது நண்பரிடம், இது குறித்து கேட்டபோது தான் பணம், கேட்கவில்லை எனக் கூறி உள்ளார்.
அதிர்ச்சியடைந்த ஸ்ரீகாந்த் சம்பவம் குறித்து, அடையாறு சைபர் கிரைம் காவல் துறையினறிடம்,
புகார் கொடுத்தார். அடையாறு காவல் துணை ஆணையர் திரு. மகேந்திரன், உத்தரவின் படி, சைபர் கிரைம் காவல் துறையினர், விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கை முடக்கினர். பின், அதிலிருந்த, 1.17 லட்சம் ரூபாயை மீட்டு, ஸ்ரீகாந்திடம் ஒப்படைத்தனர். அந்த கணக்கு யாருடையது, என காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.