கோவை: கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள பி .கே. புதூர் , ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 55) இவர் துபாயில் வேலை செய்து வந்தார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது கோவை சுந்தராபுரம் எச்.டி.எப்.சி வங்கி கிளையில் ரூ 7.13 லட்சம்பணம் சேமித்து வைத்திருந்தார்,. கோவை வந்தபிறகு இந்த பணத்தை வங்கியில் எடுக்க சென்றபோது 16 .11.2021முதல் 19.11.2021வரையில் யாரோ எடுத்து மோசடி செய்து விட்டது தெரியவந்தது. .இதுகுறித்து ராமசாமி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் தண்டபாணி, சப் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்