செங்கல்பட்டு : ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, கீழ்மின்னல் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (30), இவர் பெங்களூருவிலிருந்து, மார்பில் கற்களை கனரக லாரியில் ஏற்றிக்கொண்டு, நேற்று காலை சென்னையை அடுத்த மேடவாக்கம், நோக்கி ஸ்ரீ பெருமந்தூர் தாம்பரம் சாலையில், சென்று கொண்டிருந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம், அருகே சென்று கொண்டிந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிர்பாராத விதமாக, சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.
இதில் லாரியின் முன்பக்கம் நசுங்கிய நிலையில் லாரி ஓட்டி வந்த வினோத்குமாரின், கால் இடிபாடுகளில் சிக்கி . உயிர் தப்பினார்.
இந்த விபத்தை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள், மணிமங்கலம் காவல் துறையினருக்கும், ஶ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினருக்கும், தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள், பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு, இடிபாடுகளில் சிக்கிய வினோத்குமாரை, பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் சிறுகாயத்துடன், அதிர்ஷ்டவசமாக வினோத்குமார், உயிர் தப்பினார். பின்னர் 108 ஆம்புலன்ஸ், மூலம் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு, அவரை அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.