சென்னை : ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராணா (22), இவர், அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர், அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போட்டுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்தபோது, திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாய்ந்து சென்று சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி, சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த ராணா, அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் சிவானந்தம் (43), மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.