திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை காவல் உதவி ஆய்வாளர் திருமதி. கிருஷ்ணவேனி , மற்றும் காவல் துறையினர், கொம்பேரிபட்டியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த பெரியசாமி (47), காடையனூரை சேர்ந்த பழனிசாமி (50), ஆகியோர் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல் துறையினர், கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.600 மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா