திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக எஸ். பி. திரு. பாஸ்கரன், கிடைத்த தகவலின் படி எஸ். பி தனிப்படையினர் நிலக்கோட்டை பூ மார்க்கெட் பகுதியில், நடத்திய அதிரடி சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஜெயராஜ் (40), பூசை கருப்பு (35), பெருமாள்(60), ராஜா(40), ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ 70 ஆயிரம் மதிப்புள்ள 900 லாட்டரி சீட்டுகள், ரூ.28.500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை சார்பு ஆய்வாளர் பாலமுத்தையா வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.