சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி அருகே தேரளப்பூர், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி இவருடைய கிராமத்திற்கு, புதிதாக சாலை அமைப்பதற்கு மதிப்புத் தொகை குறித்து, கண்ணங்குடி யூனியன் அலுவலகத்தில் பணிபுரியும் பொறியாளர், திருமாறனிடம் கேட்டபோது 7000 ரூபாய், லஞ்சம் தரவேண்டும் என கூறி உள்ளார். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர், சுப்பிரமணியன் லஞ்ச ஒழிப்பு துறைக்கு, புகார் தெரிவித்தார் சுப்பிரமணியன் கண்ணங்குடி யூனியனில், ரசாயனம் தடவிய பணத்தை திருமாறனிடம், கொடுத்த போது விருதுநகர் டி.எஸ். பி திரு. ராமச்சந்திரன், தலைமையிலான காவல்துறையினர், கைது செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்